Use of green manure | பசுந்தழை உரம் பயன்

தக்கைப்பூண்டு , சணப்பை , கொளுஞ்சி போன்ற நன்செய் மற்றும் தோட்டக்கால் நிலங்களுக்கு ஏற்ற அருமையான பசுந்தாள் பயிர்களை கரும்பில் ஊடுபயிராக பயிரிட்டு 45 ஆம் நாளில் கரும்பு பயிர் வரிசையில் அடிப்பாகத்தில் வைத்து மண் அணைப்பதன் மூலம் எக்டருக்கு 12.5 டன் கூடுதல் விளைச்சல் கிடைத்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது .

 பசுந்தழை உரம் என்பது வேறு இடங்களில் கொண்டு வரப்பட்ட இலைகள் , மரங்களின் கொம்புகள் , புதர்செடி , சிறு செடிகளை உபயோகித்தல் ஆகும் . காட்டு மரங்களின் இலைகள் தான் பசுந்தழை உரத்தின் முக்கிய மூலதனம் ஆகும் .பயிரிடப்படாத நிலங்கள் , வயல் வரம்பு மற்றும் வேறு இடங்களில் வளரக்கூடிய செடிகளும் பசுந்தழை எருவிற்கான மற்றொரு ஆதாரம் 
ஆகும் . பசுந்தழை உரத்திற்கு முக்கியமான செடி வகைகள் : வேம்பு , இலுப்பை , கொளுஞ்சி , சிலோன் வாகை , புங்கம் ( புங்கமியா க்ளாபரா ) எருக்கு , அகத்தி ( செஸ்போனியா க்ரேன்டி ப்ளோரா ) , சுபாபுல் மற்றும் புதர் செடிகள் . இவைகளைப் பயிரிடுவதால் மண் அமைப்பை மேம்படுத்தலாம் . அத்துடன் நீர்படிப்புத்திறன் அதிகரிக்கும் , பயிர்கள் எதுவும் பயிரிடாத பருவத்தில் இவ்வகை உரப்பயிர்களை வளர்க்கலாம் . பசுந்தழை பயிர்களால் களைச்செடி வளர்ச்சிகளை குறைக்கலாம் . காரத்தன்மையுள்ள மண்ணை சீர்படுத்துவதற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் வேர் முடிச்சு நூர்புழுக்களையும் கட்டுப்படுத்தலாம் .
Reactions

Post a Comment

0 Comments